![]() |
நாட்டில் ஆண்களுக்கு மத்தியில் உயிரை மாய்த்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி, 100,000 ஆண்களில் 27 உயிரிழப்புகளும், 100,000 பெண்களில் ஐந்து உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டில் மொத்த உயிர்மாய்ப்புகளின் விகிதம் 100,000 க்கு 15 ஆக பதிவாகியுள்ளன. இது உலகளவில் சராசரியாக 10.5 ஐ விட மிக அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டின் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகளின் படி உயிர்மாய்ப்பு விகிதம் வயதுக்கு ஏற்ப அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 55 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடையே 100,000 க்கு 65 ஆக உயர்ந்துள்ளன. பெண்களில், 17-25 வயதுக்குட்பட்டவர்களில் 100,000 க்கு 10 ஆக உயர்ந்துள்ளன.
2019 ஆம் ஆண்டில் 703,000 பேர் உயிர்மாய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த உயிர்மாய்ப்பு விகிதங்களில் 77 சதவீதமானோர் குறைந்த வருமானம் பகுதிகளில் வசிப்பவர்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் 15–29 வயதுடையவர்களிடையே நிகழும் உயிரிழப்புகள் பெரும்பாலும் உயிர்மாய்ப்புகளாகவே காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.




.jpg)







