பட்டிருப்புக்கல்வி வலயத்தில் முறைசாராக் கல்விப்பிரிவின் தொழிற் திறன் கண்காட்சி


(சித்தா)
பட்டிருப்புக்கல்வி வலயத்தில் முறைசாராக்கல்விப்பிரிவின் இணைப்பாளர் திருமதி. றீற்றா கலைச்செல்வனின் ஒழுங்கமைப்பில் வலயக்கல்விப்பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தலமையில்  இன்று 14.11.2025.  மட்/பட்/களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலயத்தில் தொழிற்த் திறன் கண்காட்சி இடம்பெற்றது. 
இதில் பிரதம அதிதியாக சம்மாந்துறை உயர்தொழிநுட்பக் கல்லுரியின்  (ATI)  பணிப்பாளர் எஸ்.எல். முஸ்த்தபா கலந்துகொண்டதுடன் பட்டிருப்புக்கவி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான தனுசியா ராஜசேகர், எஸ்.சுரேஸ்  ஆசிரிய ஆலோசகர்கள், இணைப்பாளர்கள், அதிபர்கள், சமுகக்கற்கை நிலைய வளவாளர் நவநீதா ரகுநாதன், ஆசிரியர்கள், மட்டக்களப்பு தொழிநுட்பக் கல்லூரியின் உத்தியோகத்தர்கள், மாணவர்கள், களுவாஞ்சிகுடி  தொழில் பயிற்சி அதிகாரசபை (VTA) யின் உத்தியோகத்தர்கள், மாணவர்கள், மட்டக்களப்பு கைத்தொழில் அபிவிருத்தி சபையின் உத்தியோகத்தர்கள் உயர்தொழிநுட்பக் கலூரியின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டதுடன் சமுகக்கற்கை மாணவர்களது ஆக்கங்களான, அழகியற்கலை, தையற்கலை, சிகையலங்காரக்கலை, கேக் ஐசிங் போன்ற காட்சிப்படுத்தல், செய்முறைகளும், மட்/பட்/பட்டிருப்பு தேசியபாடசாலை மாணவர்களது ஆக்கங்கள், மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாயலத்தின்  தொழிற்கல்விப்பிரிவு மாணவர்களது ஆக்கங்கள், பெரியகல்லாறு விநாயகர் வித்தியாயலத்தின்  விசேடகல்வி அலகு மாணவர்களது ஆக்கங்கள், தொழிநுட்பக்கலுரி வளவாளர்களது தெழிற்பயிற்சிநெறிகள் தொடர்பான முன்வைப்புக்கள், தொழிபயிற்சி அதிகாரசபையின் வளவாளர்களால்  தொழிற்கற்கை நெறிகள்  தொடர்பாகவும் கண்காட்சியை பார்வையிட வந்த  பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன்,  தெழில்கல்வி, தொழிற்திறன், தொழில் முயற்சி தொடர்பான வழிகாட்டல் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.