நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் கஞ்சா தோட்டங்கள் முற்றுகை !


நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று (20) மதியம் கஞ்சா தோட்டங்கள் பொலிஸாரினால் முற்றுகை இடப்பட்டது.

எத்திமலை - கெபிலித்த வனப்பகுதியின் தெஹிகொட்டுவ பகுதியில், சுமார் ½ ஏக்கரில் வளர்க்கப்பட்ட 7,495 கஞ்சா செடிகளையும், சுமார் ½ பேர்ச்சஸில் வளர்க்கப்பட்ட 98,532 கஞ்சா செடிகளையும் அத்திமலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்ய எத்திமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, தம்பகல்ல - மீயகல வனப்பகுதியில் சுமார் ¼ ஏக்கரில் வளர்க்கப்பட்ட 3,271 கஞ்சா செடிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனுடன் தொடர்புடைய, சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.