சமீபத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் வௌியாகியுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இன்று (18) பாராளுமன்ற வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இந்தத் தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
மேலும் 80 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்குச் சிவப்பு அறிவித்தல்கள் வௌியிடப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்ய சர்வதேசப் பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளிடம் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்குப் பின்னர் 7 T56 ரக துப்பாக்கிகள், ஒரு T81 ரக துப்பாக்கி, 6 பிஸ்டல்கள், 9 ரிவோல்வர்கள், வேறு 2 ஆயுதங்கள் மற்றும் 909 தோட்டாக்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.




.jpg)







