வீட்டுக்கு எதிரே உள்ள வீதியில் தமது 11 வயது மகன் துவிச்சக்கரவண்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மகன் குளவித் தாக்குதலுக்கு உள்ளானார்.
மகனின் சத்தம் கேட்டு, தந்தை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார்.
அப்போது, தந்தை தனது மகனைக் குளவித் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவதற்காக, தனது சட்டையைக் கழற்றி மகனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
பின்னர், அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து தந்தையையும் மகனையும் குளவித் தாக்குதலில் இருந்து மீட்டு, மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், அங்கு தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குளவித் தாக்குதலுக்கு உள்ளான மகன் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் இலுப்புக்கன்னியா பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபராவார்.
இந்த வீட்டில் தந்தையும் மகனும் மட்டுமே வசித்து வந்துள்ளனர் என்றும், தாயார் வெளிநாட்டில் உள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.


.jpeg)

.jpg)







