கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தக்கன்கோட்டை சந்திக்கு அருகிலுள்ள பஸ் நிலையத்தில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை (14) காலை அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
40 முதல் 50 வயதுக்குட்பட்ட, சுமார் 05 அடி 01 அங்குல உயரமுடைய பெண் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் குட்டையான கூந்தல் கொண்ட பெண் எனவும் கருப்பு பூக்கள் கொண்ட நீல நிற ஆடை அணிந்திருந்தார் எனவும் இடது காலில் ஒரு விரல் இல்லை எனவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.
சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







.jpeg)

.jpeg)

%20(1).jpg)

