குருநாகல் - போயவலான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலல்பிட்டி பகுதியில் புதையல் தோண்டிய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நேற்று (15) பிற்பகல் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது
அவர்களிடமிருந்து அகழ்வாராய்ச்சி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் 38 மற்றும் 57 வயதுடைய, வெயாங்கொடை மற்றும் கடவத்த பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
போயவலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.






%20(1).jpg)
.jpeg)




