தென் கடற்பரப்பில் மீன்பிடிப் படகிலிருந்து நேற்று வியாழக்கிழமை (20) கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில் அதனை பார்வையிடுவதற்காக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மேலும் தெரிவிக்கையில்,
அதற்கமைய, 'போதைப்பொருள் இல்லாத நாடு - ஆரோக்கியமான வாழ்க்கை' என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப செயற்படுத்தப்பட்ட 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தீவிரமான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டிற்குள் போதைப்பொருட்களைக் கொண்டுவர வாய்ப்பு இல்லை.
சட்டவிரோத மற்றும் சமூக சீரிகேடான நடவடிக்கைகளில் இருந்து விலகவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தேசிய பாதுகாப்பை முன்னுரிமைப்படுத்தி, பாதுகாப்பான நாட்டையும் மக்களின் வாழ்க்கையையும் உறுதி செய்வதற்காக அரசாங்கம் பல மூலோபாயத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பதற்காக குறிப்பாக, தற்போது செயற்பட்டுவரும், "முழு நாடுமே ஒன்றாக" தேசிய வேளைத்திட்டத்தின்கீழ் போதைப்பொருள் சோதனைகள் தினமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை சுயாதீனமாக நடத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம், ஒரு நாடாக நாம் அனைவரும் வெற்றிகரமான முடிவுகளைக் காண முடியும். ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடல் வழியாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கையாள்வதில், இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை, இலங்கை பொலிஸ், பொலிஸ் விசேட பணிக்குழு, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் என்பன ஒன்றிணைந்து வெற்றிகரமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஏராளமான கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
நாட்டின் சிறுவர்களை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்கும், நாட்டின் சமூகப் பேரழிவிலிருந்து விடுவிப்பதற்கும், பெருமைமிக்க வாழ்க்கை அசைக்க முடியாத ஒரு நாடு என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இலங்கை கடற்படையின் விதிவிலக்கான அர்ப்பணிப்பைப் பாராட்டுவதாகவும், இதன்போது பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள நபர்கள் பற்றிய தகவல்களை சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு வழங்குமாறு மீனவ சமூகத்தை வலியுறுத்தியுள்ளார். அத்துடன் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பொறுப்பான ஊடக செய்திகளில் ஈடுபட்டுள்ள ஊடக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பங்கையும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் பாராட்டியுள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பலில் 261 கிலோகிராம் ஐஸ், 115 கிலோகிராம் ஹெரோயின், இரண்டு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




.jpg)






.jpeg)