மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் நேற்று சனிக்கிழமை (15) இரவு வாகனம் ஒன்று வீட்டு மதிலை உடைத்துக்கொண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியூடாக குருணாகலில் இருந்து அம்பாறை மருதமுனைக்கு சென்றுகொண்டிருக்கும்போதே வேககட்டுப்பாட்டை இழந்து மதிலை உடைத்துக்கொண்டுசென்றுள்ளது.
மருதமுனை வெதுப்பகம் ஒன்றிற்கு சொந்தமான குறித்த வாகனத்தில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லையென பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்துக்காரணமாக வீட்டு மதிலும் வீட்டின் சில உடமைகளுக்கும் சேதமேற்பட்டுள்ளதுடன் லொறியின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இப் பிரதேசத்தில் மழையுடனான வானிலை நிலவி வரும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





%20(1).jpg)

.jpeg)




