மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் முழுமையாக மூடப்பட்ட கொழும்பு - கண்டி வீதி




கொழும்பு - கண்டி பிரதான வீதியானது, கனேதென்ன பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
 
இன்று (22) காலை கனேதென்ன பகுதியில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நான்கு பேர் இதுவரையில் மீட்கப்பட்டு, மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த மேலும் சிலர், தொடர்ந்தும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தற்போது துரிதப்படுத்தியுள்ளது.

விபத்துக்குள்ளான இந்த வர்த்தக நிலையமானது, சிற்றுண்டி மற்றும் தேநீர் அருந்துவதற்காகப் பலர் விரும்பிச் செல்லும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு இடமாகும் என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.