கொலம்பியாவில் விமான விபத்து: அரசியல்வாதி உட்பட 15 பேர் உயிரிழப்பு


கொலம்பியாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 15 பயணிகளும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.

விமான நிறுவனம் வெளியிட்டுள்ள பயணிகள் பட்டியலின்படி, அந்த விமானத்தில் அந்நாட்டு அரசியல்வாதியான டையோஜெனெஸ் குயின்டெரோ (Diogenes Quintero) மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அந்நாட்டுத் தேர்தலில் அவர் போட்டியிடத் தயாராக இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மீட்புக் குழுவினர் விமானம் விழுந்த இடத்திற்கு மிக விரைவாகச் சென்றபோதிலும், விபத்தில் சிக்கிய எவரும் உயிர் பிழைக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.