நாட்டு மக்களுக்கு உயர்தரமான சுகாதார சேவையை வழங்குதல் மற்றும் அதனை வலுப்படுத்தும் நோக்குடன் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள மனித வள பற்றாக்குறையைப் பூர்த்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று (27) புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள சுகாதார சேவை ஊழியர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட உள்ளது. கொழும்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த நியமன கடிதங்கள் வழங்கப்படும் நிகழ்வு இடம்பெற உள்ளது.
அரச சுகாதார சேவை முகாமைத்துவ உதவியாளர்கள் ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சை கடந்த 2021 ஆம் திகதி இடம்பெற இருந்த போதிலும் அது கிடப்பில் போடப்பட்டது. அதற்குப் பின்னர் தற்போதைய அரசாங்கத்தால் 2025 ஆம் ஆண்டு இதற்கான போட்டிப் பரீட்சைகள் இடம்பெற்றிருந்தன. மேற்படி திறந்த போட்டிப் பரீட்சையில் 246 பேர் தேர்வு செய்யப்பட்டதுடன், அவர்களில் 213 பேர் நேர்முகப் பரீட்சையின் பின்னர் நியமனம் பெற தெரிவாகியுள்ளனர். நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார சேவை முகாமைத்துவ உதவியாளர் பணிகளுக்கு 2617 ஊழியர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ள போதும் தற்போது 1906 பேர் மாத்திரமே கடமையாற்றி வருகின்றனர்.







.jpeg)





