படகு கவிழ்ந்ததில் 21 வயது இளைஞன் நீரில் மூழ்கி மாயம் !



ஏறாவூர் - களுவன்கேணி பகுதியில், மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்?துள்ளனர்.

நேற்று புதன்கிழமை (28) அன்று ஏறாவூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போனவர் களுவன்கேணி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.

நீரில் மூழ்கி காணாமல்போன நபரைக் கண்டுபிடிக்க ஏறாவூர் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.