சுகாதார அமைச்சருக்கு விடுக்கப்பட்ட காலக்கெடுவில் 24 மணித்தியாலங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்


அரச வைத்தியசாலைகளும், வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்களும் எதிர் நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சருக்கு 48 மணித்தியால காலவகாசம் வழங்கியுள்ளதுடன் குறித்த காலக்கெடுவில் 24 மணித்தியாளங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் வைத்தியசாலை கட்டமைப்பினுள் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் அவதியுரும் ஏனைய சுகாதார ஊழியர் தொழிற்சங்கங்களுடனும் இது குறித்து விழாயாழக்கிழமை (29) பேச்சுவார்த்தை இடம்பெற்றதுடன், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சுகாதார அமைச்சு எமது கோரிக்கைக்கு செவிசாய்க்காது விடின் நாடளாவிய ரீதியில் தீவிர தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கத் தயாராக உள்ளேதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளர் ஹன்சமால் வீரசூரிய தெரிவித்தார்.

மேற்படி பேச்சுவார்த்தையில் தாதியர் சங்கம், மருந்தாளர் சங்கம், நிறைவுகாண் மருத்துவ வல்லூநர்கள் சங்கம் உள்ளிட்ட பல சுகாதார தொழிற்ச்சங்கள் பங்கேற்றிருந்தன.

வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய தொடர்ந்து தெரிவிக்கையில், வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்து மற்றும் உபகரணங்களை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தியும் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. மருந்துந்துகளை தனியார் நிலையங்களில் கொள்வனவு செய்வதில் கடும் நெறுக்கடி ஏற்பட்டுள்ளதுடன், அரச வைத்தியசாலைகயில் ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ள போதும் பொதுமக்களை தனியார் ஆய்வகங்களுக்கு அனுப்பிவைப்பதில் எமக்கு உடன்பாடில்லை.

குறித்த ஒருநாளுக்குள் இந்த அனைத்துப் பிரச்ரைசகளுக்கும் தீர்வினைக்கான முடியாது. இருப்பினும் பேச்சுவார்த்தையின் மூலமாவது தீர்க்கமான தீர்வுகளை வழங்க சுகாதார அமைச்சர்முன் வரவேண்டும். மௌனம் சாதிப்பது முறையல்ல. சுகாதார அமைச்சருக்கு வழங்கப்பட்ட 48 மணிநேர காலக்கெடு முடிவடையுள்ள நிலையில், இதுவரை சாதகமான பதில்கள் கிடைக்கவில்லை.

இதனால், 23 ஆயிரம் வைத்தியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், ஏனைய சுகாதார ஊழியர் சங்கங்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த தொழிற்சங்கத்தை கட்டியெழுப்ப முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் முன்வராவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றார்.

இந்நிலையில் சுகாதார அமைச்சர் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உறையாற்றும் போது , எந்தவொரு தொழிற்சங்கத்தினதும் அச்சுறுத்தல் அல்லது மிரட்டல்களுக்கு அடிப்பனிந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை. வெளிநாடுகளில் அதிக சம்பளம் கிடைப்பதாகக் கூறிக்கொண்டு, நாட்டை விட்டு வெளியேறப்போவதாக மிரட்டி சம்பள உயர்வுகளைக் கோரும் எந்தவொரு தரப்பினரின் கோரிக்கைகளுக்கும் அரசாங்கம் பணியப்போவதில்லை எனக்தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வைத்தியர் முன்னெடுத்து வரும் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையைால் இலவச சுகாதாரை துறையை நம்பியுள்ள ஏழைமக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். வைத்தியர்களின் கோரிக்கைத் தொடர்பிலும் அரசாங்கத்தின் நிலைபாடு தொடர்பிலும் தெளிவில்லாத மக்களே இறுதியில் அசௌகரியத்துக்கு ஆளாக வேண்டியுள்ளது என வைத்தியசாலைக்கு வருகைத்தந்த பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.