பாதிரியார் மீதான தாக்குதல் வழக்கு : 3 பொலிஸார் அடையாளம் !


கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த உத்தியோகத்தர்கள் இன்று (29) கம்பஹா நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்பிற்கு முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக 'அத தெரண' செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்