புதையல் தோண்டிய இருவர் பூஜை பொருட்களுடன் கைது !


குருணாகல் - அம்பன்பொல, அடவரல பகுதியில், புதையல் தோண்டிய இரண்டு சந்தேக நபர்கள் நேற்று புதன்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பன்பொல பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பூஜை பொருட்கள் மற்றும் அகழ்வாராய்ச்சி உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் 40 மற்றும் 42 வயதுடையவர்கள் எனவும், அம்பன்பொல மற்றும் வாரியபொல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பன்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.