அரச வைத்தியசாலையில் பரிசோதனை குழாய் கருவூட்டல் !


கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் சோதனைக் குழாய் குழந்தை சிகிச்சை சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.சுகாதார அமைச்சு இதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறது.தனியார் வைத்தியசாலையில் இந்த சேவையை பெற்றுக்கொள்ள 02 மில்லியன் முதல் 03 மில்லியன் ரூபா வரை தம்பதிகள் செலவிட வேண்டும். இத்தொகையை செலவிட முடியாத தம்பதியினருக்கு இந்த சேவை பெரும் உதவியாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சோதனைக் குழாய் குழந்தை சிகிச்சை சேவை மூன்று மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கப்படுவதாக காசல் வீதி மகளிர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அஜித் குமார தண்டநாராயணா தெரிவித்தார்.இந்நடவடிக்கை பொது சுகாதார அமைப்பு மூலம் மேம்பட்ட இனப்பெருக்க சுகாதார சேவைகளை வழங்குவதில், ஒரு குறிப்பிடத்தக்க படியாக அமைந்துள்ளது.