கருங்கல் பேழைகளுக்குள் இருந்த விலைமதிப்பற்ற திரவம்; சந்தேகநபர்கள் இரு கைது !


புதையலில் இருந்து எடுக்கப்பட்ட தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும், செதுக்கல் வேலைப்பாடுகளுடன் கூடிய கருங்கல்லால் செதுக்கப்பட்ட பல்வேறு வடிவங்களிலான மூன்று பேழைகளுடன்  சந்தேகநபர்கள் இரு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்தச் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று பேழைகளையும் மொரட்டுவையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் வைத்து, 15 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டிருந்த வேளையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பேழைகளுக்குள் அதிக பெறுமதி வாய்ந்த எண்ணெய் போன்ற திரவம் ஒன்று உள்ளதாகவும், அவை பல்வேறு வைத்திய முறைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்