(சித்தா)
குருமண்வெளி கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 1 இல் புதிதாக இணையும் மாணவர்களை வரவேற்று அவர்களின் கல்விப் பயணத்தை ஆரம்பித்து வைக்கும் கால்கோள் விழா 29.01.2026 இல் பாடசாலையின் அதிபர் சீ.சுதாகரன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதி பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஆங்கிலப் பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர் ஆ.ரவிச்சந்திரன், ஆன்மீக அதிதி சிவஸ்ரீ.வண.வ.கு.யோகராசா குருக்கள், விசேட அதிதி குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலய அதிபர் ப.ஜெயகாந்தன், கௌரவ அதிகளாக ஓய்வு நிலை அதிபர் கோ.கைலாயபிள்ளை, ஓய்வு நிலை அதிபர் நா.புட்பமூர்த்தி, ஓய்வு நிலை அதிபர் விஜயலெட்சுமி இராமச்சந்திரா அவர்களுடன் ஆசிரியர்கள், குருமண்வெளி பாலர் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.
நிகழ்வில் தரம் 1 மாணவர்கள் மற்றும் அதிதிகள் தரம் 2 மாணவர்களால் வரவேற்கப்பட்டு தொடர்ந்து மக்கள விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்புரை, வரவேற்பு நடனம், தலைமையுரை, மாணவர்களின் கலைநிகழ்வுகள், அதிதிகள் உரை, நன்றியுரை என மிகவும் கோலாகரமான முறையில் நிகழ்வுகள் ஒழுங்கமைப்பட்டிருந்தன.




.jpeg)
.jpeg)











.jpeg)
