
மட்டக்களப்பு - சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராண் பகுதியில், வாழைச்சேனை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று புதன்கிழமை (28) மதியம் இந்த விபத்து நேர்ந்துள்ளது.இதன்போது விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது. சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












