
கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 15,000 இற்கும் மேற்பட்ட எதிரி இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஒரு நாளைக்கு 1,000 இற்கும் அதிகமான இலக்குகள் எட்டப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்கள் காரணமாக ஈரான் இராணுவம் தற்போது பலவீனமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானிடம் தற்போது விமானப்படை மற்றும் கடற்படை இல்லை என பீட் ஹெக்செத் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் ஏவுகணைகளின் அளவு 90 சதவீதத்தினாலும், ஒருவழி தாக்குதல் ட்ரோன் விமானங்களின் அளவு 95 சதவீதத்தினாலும் குறைந்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.











.jpeg)
