ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானி மீட்பு !


ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட போர்விமானத்தில் இருந்து காணாமல் போன அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை F-15E Strike Eagle போர்விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அமெரிக்கா தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதேவேளை, “எதிரி விமானி”யை ஒப்படைக்கும் எவருக்கும் பரிசு வழங்கப்படும் என ஈரான் அறிவித்திருந்தது.

மற்றொரு விமான பணியாளரும் இதற்கு முன்னர் மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட விமானி காயமடைந்திருந்தாலும் “நலமாக இருப்பார்” என டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அவர் “ஈரானின் ஆபத்தான மலைப்பகுதிகளில்” தஞ்சமடைந்திருந்ததாகவும் கூறினார்.

இந்த மீட்பு நடவடிக்கையில் “பல   விமானங்கள்” ஈடுபட்டதாகவும், அவரது இருப்பிடத்தை அமெரிக்கா “24 மணி நேரமும் கண்காணித்து, முறையாக திட்டமிட்டு மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்தது” என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

தேடுதல் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள்

முன்னதாக காணாமல் போன அமெரிக்க வீரரை கண்டுபிடிக்க உதவுபவருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இரான் ராணுவத்துடன் பொதுமக்களும் அமெரிக்க வீரரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.