சீனாவில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் கப்பல்


சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தாங்கிய கப்பலொன்றை இலங்கைக்கு வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பில் நாளை (06) விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாக இலங்கை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் வகை மற்றும் சம்பந்தப்பட்ட கப்பல் நாட்டை வந்தடையும் திகதி ஆகியன தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.