சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 990,000ஐ கடந்தது..


இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 9,90,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் மே 24ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 990,032 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் இந்தியப் பிரஜைகளாவர் என்பதுடன், அந்த எண்ணிக்கை 236,916 ஆகும்.

மேலும் பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, மே மாதம் முதலாம் திகதி முதல் 24ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 113,755 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.