
திருகோணமலை - கோமரன்கடவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒட்டிச்சங்குளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பக்மீகம பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் மேலும் சிலருடன் சேர்ந்து, குறித்த பகுதியிலுள்ள காடொன்றுக்கு தேன் எடுப்பதற்காகச் சென்றிருந்தபோது, காட்டு யானைக் கூட்டத்திடம் அகப்பட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கோமரன்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.






.jpeg)





