அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அந்த நிறுவனம் இன்று (16) தெரிவித்துள்ளதாவது, துபாயில் அமைந்துள்ள சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் கணக்கு மூன்றாம் தரப்பு ஒன்றினால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அந்த மோசடியான மின்னஞ்சல் செய்திகள் மூலம் வழங்கப்பட்ட வங்கி கணக்கு விபரங்களின் அடிப்படையில், தமது நிறுவனம் 974,000 திர்ஹாம் தொகையை அந்த தவறான கணக்கிற்கு செலுத்தியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை காரியாலயத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடு குறித்து விளக்கமளித்துள்ள அந்த நிறுவனம், சென்னையில் அமைந்துள்ள தமது காரியாலயத்தில் பணிபுரிந்த நிதிப் பிரிவைச் சேர்ந்த இந்திய ஊழியர்கள் குழுவொன்றே இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அவர்கள் வணிக விலைப்பட்டியல்களின் கையொப்பங்கள் மற்றும் பணச்செலுத்துகை விபரங்களை போலி ஆவணங்கள் மூலம் மாற்றியமைத்து, நீண்டகாலமாக 22 மில்லியன் இந்திய ரூபாய் தொகையை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.











.jpeg)

