
ஹொரணை பகுதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் 3 கோடியே 50 இலட்சம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, வங்கியின் உதவி மேலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (03) புதன்கிழமை நண்பகல் 2:55 மணியளவில், வங்கியின் ஊழியர் ஒருவர் இரண்டு பணப்பைகளை வாங்கிக் கொண்டு வங்கியின் பின்புறக் கதவூடாக வெளியே எடுத்துச் சென்றபோது, அங்கு வந்த நபர் ஒருவர் அந்தப் பணப்பைகளைக் பலவந்தமாகப் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
ஏடிஎம் இயந்திரங்களில் வைப்புச் செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்ட3 கோடியே 50 இலட்சம் ரூபா பணமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், இக்கொள்ளைச் சம்பவத்துடன் வங்கியின் ஊழியர்களுக்குத் தொடர்பு இருக்கலாமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதனையடுத்தே, இக்குற்றச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் வங்கியின் உதவி மேலாளரும் பாதுகாப்பு அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.







.jpg)




