.jpeg)
கண்டியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்டத் தேர்தல் அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கட்சியிலிருந்து பிரிந்து சென்ற உறுப்பினர்களுடன் மீண்டும் கைகோர்ப்பது காலத்தின் தேவையாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், மத்திய மாகாண சபையில் வெற்றிபெற ஒருங்கிணைந்த வேட்பாளர் பட்டியல் அவசியம் எனவும், இரு தரப்பினரும் ஒன்றிணைந்தால் அரசியல் ரீதியாக வலுவான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லக்கூடிய தலைமைத்துவம் ரணில் விக்கிரமசிங்கவிடம் உள்ளதாகக் கூறிய அவர், ரணில் மற்றும் சஜித் அணிகளின் பலங்கள் ஒன்றிணைந்தால் புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க முடியும் என்றார்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட மற்றும் அடிமட்ட அமைப்புகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திய அவர், மக்கள் மத்தியில் சென்று அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதன் மூலமே அரசியல் வெற்றியை அடைய முடியும் எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சாந்தினி கொங்கஹகே, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜே.எம். லஃபீர், முன்னாள் கண்டி மேயர் கேசர சேனநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.







.jpg)




