
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற தங்க நகைக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர், நேற்று (04) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெல்லம்பிட்டிய மற்றும் கொலன்னாவை பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 44 வயதுடையவர்களாவர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு தங்க நகைக் கொள்ளைச் சம்பவத்துடனும் இவர்களுக்குத் தொடர்பு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், விசாரணைப் பிரிவினரால் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சந்தேகநபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட 12 தங்க மோதிரங்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும், நீர்கொழும்பு பகுதியில் தங்க நகைகளைக் கொள்ளையடிப்பதற்காகச் சந்தேகநபர்கள் பயன்படுத்தி வந்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களினால் திருடப்பட்ட ஏனைய தங்க நகைகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளபட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தனர்.







.jpg)




