ஹொரணை முதியோர் இல்லத்தில் தீ - பணிப்பாளருக்கு விளக்கமறியல்..


ஹொரணை - படகொட பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கைதான அதன் பணிப்பாளரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (4) ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹொரணை - படகொட பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.