கல்முனை கார்மெல் பற்றிமா கல்லூரியில் சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு “A Memo to the nature” வேலைத்திட்டம்

 

(சித்தா)நவீன தொழிநுட்ப மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட உலகிற்குள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பாடசாலை மாணவர்கள் புத்தகங்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தபட்டுவிடாமல் அவர்கள் மத்தியில் இயற்கைச் சூழல் மீதான அன்பு, மரியாதை மற்றும் நன்றி உணர்வு போன்ற விழுமியங்களை நடைமுறைச் செயற்பாடுகளினூடாக ஏற்படுத்தும் முகமாக மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் செயற்பாடு இன்று 05.06.2026 கல்முனை கார்மெல் பற்றிமா கல்லூரியில் பாடசாலையின் அதிபர் ச.இ.ரெஜினோல்ட் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டு சுற்றாடல் தின வேலைத்திட்டத்தை சிறப்பித்தனர்.
பாடசாலை வளாகத்தில் நீண்ட காலமாகப் பிள்ளைகளுக்கு நிழல் கொடுத்து வரும் ஒரு பெரு விருட்சத்தை தங்களது 'பசுமைத் தோழனாகக்'  கருதி அதன் மூலம் சூழல் நேயமிக்கதொரு மாணவர் சமூகத்தைத் தோற்றுவிப்பதற்கு இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.