வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவிக்கையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மண்ணெண்ணெயைப் பயன்படுத்துவதாக சந்தேகிக்கப்படும் சுமார் 100 பேருந்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றார்.
அவற்றில் சில பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் மேலும் வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சந்தேகத்திற்கிடமான பல பேருந்துகளிலிருந்து பெறப்பட்ட எரிபொருள் மாதிரிகள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. பரிசோதனையில் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டமை உறுதியாகின், சம்பந்தப்பட்டோருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு, அனுமதியற்ற எரிபொருளைப் பயன்படுத்தும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் DIG சேனாதீர தெரிவித்தார்.
அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் அதிகளவில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்யும் சந்தேகத்திற்கிடமான வாடிக்கையாளர்களைக் கவனித்து, பயணிகள் பேருந்துகளில் பயன்படுத்தும் நோக்கில் மண்ணெண்ணெய் விற்பனை செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.











.jpg)

