செவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கிழமை (14) விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய விவசாய அமைச்சரின் கருத்துக்கமைய ஒரு கிலோகிராம் நெல்லை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாகும் நிலையில் அரசாங்கம் வெறும் 120 ரூபா என்ற நிலையான விலையை பெற்றுக் கொடுக்கிறது. இவ்வாறான நட்டத்துக்கு மத்தியில் விதை நெல் கிடைக்காமை தரமான உரம் மற்றும் விதை நெல் தட்டுப்பாடு சந்தையிலுள்ள விவசாய இரசாயனங்களின் தரம் குறைந்துள்ளமை போன்ற பிரச்சினைகள் காணப்படுவதுடன் விவசாய பொருட்களின் விலைகளும் மிகக் கடுமையாக அதிகரித்துக் காணப்படுகின்றன. அத்துடன் யானை – மனித மோதலினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் அறுவடைக்கு நிலையான விலை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. நெல் களஞ்சியசாலைகளில் கடந்த போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் இன்னும் அவ்வாறே தேங்கி காணப்படுகிறது. இவ்வாறான பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழும் விவசாயிகளுக்கு எவ்வாறு தான் நீதி கிடைக்கும்.
அன்று தேர்தல் காலத்தில் வயல்களில் இறங்கி நெற்கதிர்களை வாயில் கடித்துக் கொண்டு விவசாயிகளுக்கு ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையை பெற்றுத் தருவோம் என்று உறுதியளித்தனர். இன்று ஆட்சிக்கு வந்த பின்னர் நெல் விலை அதிகரித்தால் நுகர்வோருக்கு அநீதி ஏற்படும் என்று கூறி தட்டிக் கழித்து வருகின்றனர். இதன் மூலம் இன்று நுகர்வோரோ அல்லது விவசாயிகளோ அன்றி மாறாக இடைத்தரகர்கள் இங்கு அதிக இலாபத்தை ஈட்டி வருகின்றனர்.
எனவே இப்போதாவது விவசாயிகளின் உற்பத்திச் செலவுக்கு ஏற்ற நியாயமான விலையை அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்து, அவர்களின் உழைப்புக்குரிய நியாயமான இலாபத்தை ஈட்டிக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அத்துடன், நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்குத் தேவையான நிவாரணங்களையும் சலுகைகளையும் பெற்றுக் கொடுத்து, நெல் கொள்வனவு செய்யும் செயல்முறையை மேலும் முறைப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும். தமக்குக் கிடைத்த மக்கள் ஆணைக்கு தவறு இழைக்காமல் எமது நாட்டு விவசாயிகளுக்கு உடனடியாக நீதியைப் பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தினார்.






.jpg)







