
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் 24ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடர் கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் நிமித்தம், பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான், இன்று காணொளி இணைப்பின் ஊடாக (Video Conference) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போதே நீதிமன்றம் பிள்ளையானுக்கு விளக்கமறியலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலதிக தகவல்கள்
மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் என 3 பேரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் காணொளி ஊடாக உத்தரவிட்டு இலண்டனில் உள்ள பொலிஸ் பாயிஸ் பிடிவிறாந்து பிறப்பித்து கட்டளையிட்டார்.
கொலைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டு, ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோரை கடந்த 2025 நவம்பர் மாதம் சிஐடி பிரிவினர் கைது செய்தனர்.
5 முக்கிய மனிதக் கொலைகளுடன் தொடர்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான இலண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகம் பாய்ஸ் உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 17ஆம் திகதி சிஐடியினர் வழக்கு தாக்கல் செய்ததையடுத்து, அவர்களை ஜூன் 30ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம் நீதிமன்றில் பிள்ளையான் உட்பட 3 பேரையும் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதனையடுத்து 3 பேரும் தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வரும் நிலையில், இன்று திங்கட்கிழமை (13) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இவ்வழக்கினை, விசாரணைக்காக நீதவான் எடுத்துக்கொண்டார்.
அப்போது சந்தேக நபரான இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலாளியான முகமட் சிபான், சிஐடியினர் ஆஜர்படுத்திய பிள்ளையான் மற்றும் சந்தேக நபர் ஆகிய இருவரையும் பாதுகாப்பு காரணமாக நீதிமன்றத்துக்கு அழைத்துவர முடியாமை தொடர்பாக நீதிமன்றத்துக்கு தெரிவித்தனர்.
இதனை ஆராய்ந்த நீதவான் பிள்ளையான், மற்றைய சந்தேக நபர் ஆகிய இருவரையும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைகளில் (சூம்) இணையவழி காணொளி ஊடாக பார்வையிட்டு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் பொலிஸ் பாய்ஸ்க்கு பிடிவிறாந்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதேவேளை கடந்த 30ஆம் திகதி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிள்ளையான் உட்பட 3 பேரையும் சிஐடியினர் அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது




.jpg)








