
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆடிவேல் விழாவை முன்னிட்டு, பக்தர்களின் பாதயாத்திரைக்கான புனித வனப்பாதை இன்று (10) காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
உகந்தை மலையிலிருந்து கதிர்காமம் நோக்கிய காட்டு வழிப் பாதையில் இன்று காலை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வனப்பாதை இன்று முதல் எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி வரை, தொடர்ந்து 15 நாட்களுக்கு திறந்திருக்கும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பாதயாத்திரையின் முதல் நாளான இன்று, 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்தப் புனித கானகப் பயணத்தை ஆரம்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்புப் படையினரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளும் பாதயாத்திரிகர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வனவிலங்குகள் நடமாடும் பகுதிகள் வழியாகப் பயணிக்க வேண்டியிருப்பதால், பக்தர்கள் கூட்டமாகச் செல்ல வேண்டும் என்றும், வனப்பகுதியை மாசுபடுத்தாத வகையில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.






.jpg)



.jpg)


