
நாட்டிற்குள் 11,885,514 ரூபாய் பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற வர்த்தகர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாத்தளைப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபரால் கொண்டு வரப்பட்ட பைகளிலிருந்து 271 கிராம் மற்றும் 480 மில்லிகிராம் நிறையுடைய 12 தங்கச் சங்கிலிகள், 10 தங்கக் கைக்காப்புகள் மற்றும் 2 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட தங்கம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பயணிக்கு 1,000,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.






.jpg)



.jpg)


