மஹமோதர வைத்தியசாலையை சிறைச்சாலையாக்கும் தீர்மானம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் – வைத்தியர் சமல் சஞ்சீவ


 நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்ரத தொடர்ந்து காலி மஹமோதர வைத்தியசாலையை சிறைச்சாலையாக மாற்றுவதற்கு அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (12) இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மஹமோதர வைத்தியசாலை என்பது சுற்றுலாப் பயணிகளுக்கான பிரத்யேக வைத்தியசாவையாகவும் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்களுக்கான விசேட சிகிச்சை மையமாகவும் மாற்றுவதே தற்போதைய சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமானது.

தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் தென் மாகாணத்திலுள்ள பிரதான போதானா வைத்தியசாலைகள் மற்றும் ஆரம்ப சுகாதார வைத்தியாசாலைகளில் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கடுமையான சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும் இந்த வைத்தியாலை பிரதான வீதிக்கு மிக அருகிலும் கடற்கரைக்கு அருகாமையிலும் அமைந்துள்ளதால் இதனை ஒரு சிறைச்சாலையாக மாற்றுவதை விட சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்துக்கு நன்மையளிக்கும் கல்வி பயிற்சி மையமாக அல்லது சுற்றுலா வைத்தியசாலையாக மாற்றுவதே பொருத்தமானதாக அமையும் என்றார்.