மட்டக்களப்பு தமிழ் சங்கத்தில் வெல்லாவெளி விவேகாநந்தத்தின் சிறுகதைத் தொகுதியான தண்ணிச்சோறு நூல் வெளியீடு


(சித்தா)

மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் வெளியீட்டில்  சிறுகதைத் தொகுதியான தண்ணிச்சோறு நூல் வெளியீடு கடந்த 11.07.2026 மட்டக்களப்பு தமிழச்சங்க மண்டபத்தில் மட்டக்களப்பு தமிழச்சங்கத் தலைவர் சைவப் புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் முன்னிலை விருந்தினராக வாழ்நாள் பேராசிரியர் வ.மகேஸ்வரன், தென் கிழக்குப் பல்கலைக் கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி.க.இரகுபரன், கிழக்கு மாகாண மேனாள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் A.M.E. போல், இலக்கிய கலாநிதி சீ.கோபலசிங்கம் மற்றும் விசேட அதிதிகள், கலை ஆர்வலர்கள், விமர்சகர்கள், கல்விமான்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் கு.விநாயகமூர்த்தியின் தேவாரத்துடன் மங்கலகரமாக ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து த.சாந்தகுமாரின் தமிழ் மொழி வாழ்த்து, க.சுயந்தனாவின் வரவேற்பு நடனம், இ.தனுராஜின் வரவேற்புரை, செங்கதிரோன் த.கேபாலகிருஷ்ணனின் நூல் அறிமுகவுரை, ரூபி வலன்டினா பிரான்சிஸ்சின் நூல் நயவுரை, அதிதிகள் உரை, நூலாசிரியரின் ஏற்புரை, தமிழ் சங்கத் துணைச் செயலாளர் பிரியா கருணாகரனின் நன்றியுரை என நிகழ்வுகள் வெறும் புத்தகம் அச்சிடப்பட்டு வெளிவருவது மட்டுமல்லாது புதிய அறிவின் தொடக்கமாகவும், மிகவும் சிறப்பாகவும்  இந்நூல் வெளியீடு அமைந்திருந்தமையானது கலை ஆர்வலர்களின் மனப்பூர்வமா வெளிப்பாடாகக் காணப்பட்டது.