ரிட்டிகல வன சரணாலயத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து தேனீ கூட்டை அழித்த நபர் கைது !



ரிட்டிகல கடுமையான இயற்கை வன சரணாலயத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து, தேனீ கூட்டை அழித்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை வனவிலங்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (11) கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர், உரிய அனுமதிப்பத்திரமின்றி கடுமையான பாதுகாக்கப்பட்ட வன சரணாலயத்திற்குள் நுழைந்தமை மற்றும் வனவிலங்குகளின் இயற்கை வாழ்விடத்தை சேதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் எதிர்வரும் ஜூலை 16 ஆம் திகதி கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.