
களுத்துறை மாவட்ட செயலகத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக அங்குள்ள உபகரணங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து சம்பவம் திங்கட்கிழமை (13) காலை இடம்பெற்றுள்ளது.
இருப்பினும், இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் உடனடியாக தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இதேவேளை, இந்த தீ விபத்தைத் தொடர்ந்து களுத்துறை மாவட்ட செயலகத்திற்கான மின்சார விநியோகம் தற்போது தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




.jpg)








