
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் காத்தான்குடி நகர சபைக்கு தேசிய பட்டியல் ஊடாக உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நகர சபை உறுப்பினர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி நகர சபையினை பிரதிநிதித்துவப்படுத்தும் குறித்த நகர சபை உறுப்பினர், காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் தமக்குச் சொந்தமான சுற்றுலாப் பயணிகள் விடுதியில் பணியாற்றி வந்த 21 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, விசாரணைகளுக்காக குறித்த நகர சபை உறுப்பினரை அழைத்த காத்தான்குடி பொலிஸார், ஆரம்ப விசாரணைகளின் பின்னர் அவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






.jpg)



.jpg)


