(செங்கலடி நிருபர் சுபா)
மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலகம் முன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்
கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், செங்கலடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று நண்பகல் 12 மணியளவில் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகம் முன் நடைபெற்றது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்ளுக்காக சமர்ப்பிக்கப்பட்ட புதிய சேவைக் சுற்று நிருபத்தை செயல்படுத்துதல், MN-5 சம்பள விகிதம் தொடர்பாக நியாயமான மற்றும் பொருத்தமான தீர்வைக் கோருதல். உயர் தரம் மற்றும் சிறப்புத் தரம் தொடர்பான பொருத்தமான தொழில் முன்னேற்ற வாய்ப்புகளை உறுதி செய்தல். பதவி உயர்வுகள்இ தொழில் முன்னேற்றம் மற்றும் தொழில்முறை அங்கீகாரம் தொடர்பான நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கடமைகள்இ பொறுப்புகள் மற்றும் நிர்வாகப் பங்கைச் சரியாகப் பிரதிபலிக்கும் பொருத்தமான சேவைக் கட்டமைப்பை நிறுவுதல்இ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் செங்கலடி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரதேச செயலகம் முன் கையில் பதாதைகளுடன் தமக்கான தீர்வைக் கோரி கவணஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் உத்தியோகத்தர்கள் ஈடுபட்டிருந்தனர்.


.jpeg)
.jpeg)


.jpeg)

.jpeg)


.jpeg)


.jpeg)




.jpg)
.jpg)






.jpg)
.jpg)