
சிரிபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகம பகுதியில் காட்டு யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 14 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (01) இரவில் மின்சாரம் தாக்கிய நிலையில் குறித்த சிறுவன் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் சிரிபுர, பல்லேகம பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் தனது காணியைச் சுற்றி கம்பி வேலி அமைத்து, அதற்குத் தனது வீட்டிலிருந்தே சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தைப் பாய்ச்சியுள்ளார்.
இதன்போது இந்த சிறுவன் அவ்வேலிக்கு அருகாமையில் சென்ற வேளையில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி விபத்து சம்பவித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சட்டவிரோத மின்சார வேலியை அமைத்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சிரிபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



.jpg)

.jpg)






.jpg)