இதன்போது ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.
கலந்துரையாடலின் போது வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் படகுகளை நிறுத்தும் தளத்தினை விரிவு படுத்துவது தொடர்பாகவும் மீனவ சமுகம் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், எதிர்காலத்தில் துறைமுக அபிவிருத்திக்காக ஒதுக்கப்படவுள்ள 1450 மில்லியன் நிதி மற்றும் அந்த நிதியின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பிரதி அமைச்சரால் விளக்கமளிக்கப்பட்டது.
பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் படகு மூலம் துறைமுகப் பகுதிக்குச் சென்று, துறைமுகத்தின் தற்போதைய நிலைமை மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு காணப்படும் வசதிகள் உள்ளிட்டவற்றை நேரடியாக பார்வையிட்டனர்.
குறித்த நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் தலைவர் கபில பமுன ஆராய்ச்சி, திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீரன்ஜன், வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக முகாமையாளர் ஜோர்ஜ் ரெஜினோல் விஜிதரன் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






.jpg)
.jpg)


.jpg)


