
யாழ்ப்பாணத்தில் பல வருடங்களாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் சுன்னாகம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் மற்றும் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
சுன்னாகம் அந்தோனியார் ஆலயத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த கைப்பை ஒன்று களவாடப்பட்டதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அந்தவகையில் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை சுன்னாகப் பொலிசார் நேற்றையதினம் கைது செய்தனர். அதன் அடிப்படையில் அவரிடம் இருந்து 5 கைபேசிகள், ஒரு தொகை பணம் மற்றும் 2 கிராம் 820 மில்லிகாிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பதை மீட்கப்பட்டுள்ளன.
இவர் கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட கைபேசிகளில் 3 கைபேசிகள் மானிப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பகுதியில் திருடப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
விவோ மற்றும் ரெட்மி ஆகிய கைபேசிகள் யாருடையது என தெரியவராத நிலையில் அதன் உரிமையாளர்கள் அடையாளத்தை காண்பித்து தமது பொருட்களை பெற்றுச் செல்ல முடியும் என சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிதர்சன் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றம் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





.jpg)
.jpg)


.jpg)


