.jpg)
நாட்டில் வெறிநோயை முற்றிலும் ஒழிப்பதையும், நாய் தொகையைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு தயார் செய்யப்பட்ட புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்த புதிய சட்டத்தின் மூலம் தற்போதைய விசர்நாய் கடி ஒழிப்பு அவசரச்சட்டம் மற்றும் நாய் பதிவு அவசரச்சட்டம் ஆகியவை இரத்து செய்யப்பட்டு, புதிய சட்டக் கட்டமைப்பு அமுலுக்கு வரும்.
06 வாரங்களுக்கு மேற்பட்ட நாய்களின் உரிமையாளர்கள் அல்லது பொறுப்பாளர்கள், தங்கள் நாய்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறை விசர்நாய் கடி தடுப்பூசி போடுவதையும், சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்தில் பதிவு செய்வதையும் உறுதி செய்ய வேண்டும்.
கட்டணம் செலுத்தி பதிவு செய்த பின், உள்ளூராட்சி சபையில் பதிவு எண் மற்றும் சான்றிதழை வழங்கும்.
அதிகாரம் பெற்ற அதிகாரி கேட்கும்போது செல்லுபடியாகும் தடுப்பூசி அல்லது பதிவு சான்றிதழைக் காட்டத் தவறினால், 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். தகுந்த காரணம் இருந்தால் மேலும் 14 நாட்கள் வழங்கப்படும். குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றாவிட்டால், பதிவு கட்டணத்துடன் ரூ. 2,000 தண்டப்பணம் விதிக்கப்படும்.
உள்ளூராட்சி சபைகள் விசர்நாய்களைப் பிடித்து கருத்தடை/ஸ்டெர்லைசேஷன் செய்து, அவை குணமடைந்த பிறகு பிடித்த இடத்திலேயே மீண்டும் கொண்டு போய் விட வேண்டும்.
வர்த்தக ரீதியாக நாய்களை இனப்பெருக்கம் செய்யும் மையங்கள் உள்ளூராட்சி சபைகளிடம் உரிமம் பெற வேண்டும். விதியை மீறினால் ரூ. 10,000 வரை தண்டப்பணம், 2 மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
பொது இடங்களில் நாய்களைக் கைவிட்டால் ரூ. 10,000 வரை தண்டப்பணம், 3 மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் தண்டனையாகக் கிடைக்கும்.
நாய்கள் நபர்களையோ அல்லது பிற விலங்குகளையோ தாக்கினால் ஏற்படும் சேதங்கள் மற்றும் காயங்களுக்கு நாய் உரிமையாளரே சட்டப்பூர்வமாகப் பொறுப்பேற்க வேண்டும்.
ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய அளவில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிறகு முழுமையாக அமுலுக்கு வரும்.










.jpg)
.webp)
.jpg)