முச்சக்கரவண்டியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு – மொரட்டுவையில் பரபரப்பு



மொரட்டுவை – ராவத்தாவத்தை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து புதன்கிழமை (9) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான முச்சக்கரவண்டியின் சாரதி எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளார்.

அங்குலானை பகுதியைச் சேர்ந்த குறித்த சாரதி, மொரட்டுவை மாநகர சபையில் பணியாற்றும் ஊழியர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸார் இரண்டு விசேட குழுக்களை அமைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.