
கிரிந்திவெல, மில்லதே பகுதியில் உள்ள வீட்டில் 75 வயதுடைய தனது மனைவியை கொலை செய்ததாகக் கூறப்படும் 76 வயதுடைய கணவர், பின்னர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (29) கொஹிலகல வீதியிலுள்ள தம்பதியினரின் வீட்டில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் விட்டுச் சென்றதாகக் கூறப்படும் கடிதத்தில், தனது மனைவி கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், சம்பவம் தொடர்பான காரணங்களையும் குறிப்பிட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தங்களது உடல்களை ஒன்றாக வைக்குமாறும் அந்தக் கடிதத்தில் கோரப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் குறித்த நபர் வெயாங்கொட பகுதியில் ரயில் சம்பந்தப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.





.jpg)
.jpg)


.jpg)


