யானைத் தந்தத் துண்டுகள், ரோமங்களுடன் நபர் ஒருவர் கைது


காட்டு யானைகளின் தந்தத் துண்டுகள் மற்றும் யானை ரோமங்களைச் சொந்தமாக வைத்துள்ளதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தள நகர் பகுதியில் நேற்று புதன்கிழமை (9) பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழு மேற்கொண்ட விசேட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டிருந்த நபரிடமிருந்து 11 யானைத் தந்தத்துண்டுகள் யானைத் தந்தங்களினால் செய்யப்பட்ட கை சங்கிலி மற்றும் 29 யானை ரோமங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் பாணந்துறையைச் சேர்ந்த 67 வயதுடைய நபர் ஆவார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக புத்தள பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.