
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கடத்தி வரப்பட்ட 32,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தின் வருகை முனையத்தில் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போது, 36 மற்றும் 51 வயதுடைய இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலாவது சந்தேகநபரிடம் இருந்து 70 கார்ட்டன்களில் அடங்கிய 14,000 சிகரெட்டுகளும், இரண்டாவது சந்தேகநபரிடம் இருந்து 90 கார்ட்டன்களில் அடங்கிய 18,000 சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதன்படி, இருவரிடமிருந்தும் மொத்தமாக 160 கார்ட்டன்களில் அடங்கிய 32,000 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் SQ-468 விமானம் மூலம் சிங்கப்பூரிலிருந்து இன்று (27) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இரு இலங்கையர்கள் பிணை நின்றதைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக புலனாய்வு விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.




.jpg)





.jpg)

